உள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து

0
1283

கோலாலம்பூர், மார்ச் 29-

அண்மையில் பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு ஆலய திருவிழாவில் உள்ளூர் வியாபாரிகளுக்கு முக்கியத்துவத்தை வழங்காத ஆலய நிர்வாகத்திற்கு மைக்கி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளூர் வியாபாரிகளுக்கே முன்னுரிமை எனக் கூறிய ஆலய நிர்வாகம், கடைசியில் பல வெளிநாட்டவர்களுக்கு கோவிலின் மிக அருகாமையில் பல கூடாரங்களை அமைத்து அன்னியவர்களுக்கு உதவி செய்துள்ளது. இதை தட்டி கேட்டிட, உள்ளூர் வியாபாரிகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மெத்தனமகா இருந்துள்ளது.

மேலும் நிர்வாகத்தின் ஆதரவுடன் கடைகளை வெளிநாட்டவர்களுக்கு ஒரு சிலர் முகவர்களாக செயல்பட்டதும் கட்டிக்கத்தக்கது என மைக்கியின் தேசிய தலைவர் டத்தோ ந. கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் மைக்கி பல ஆதாரங்களை பலரிடமிருந்து புகார்களாக பெற்று இருப்பதாக வும் அவர் மேலும் குறிப்பிடடார். சமூக வலைத்தளங்களிலும் இவ்விவகாரங்களை பொதுமக்கள் பரவலாக பகிர்ந்து அவர்களது ஆதங்கங்களை தெரிவித்தும் வருகின்றனர் என அவர் கூறினார்.

ஆண்மையகாலமாக பலர் வணிக திருவிழா எனும் பெயரில் நமது உள்ளூர் வியாபாரிகளை புறக்கணிக்கின்றனர். அந்நிய வியாபாரிகளை வரவழைத்து கல்லா கட்டுகின்றனர். அந்நியர்களுக்கு கடைகளை வாடகைக்கு கொடுத்துவிட்டு, ஒப்புக்கு நமது இந்தியர்களை கடைகளை நடத்துவதுபோல் பாவனை செய்கிறார்கள். மேலும் அரசாங்கம் மாறினாலும், அன்றும் இன்றும் அரசியல்வாதிகளை முன்னிறுத்தி இம்மாதிரியான வணிக திருவிழாக்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் நமது வியாபாரிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர். சமீபத்தில் உள்ளூர் பயனீட்டாளர் அமைச்சின் அமைச்சர், மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சைபுதீன் நெசவுதின் அவர்களுடனான கலந்துரையாடலில் இவ்விவகாரத்தை மைக்கி அமைச்சின் கவனத்திற்கு எடுத்து சென்றது. அமைச்சர் இவ்விவகாரமாக கூடிய விரைவில் மைக்கியை சந்திப்பார் என டத்தோ ந. கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தை நமது பிரதமர் மாண்புமிகு துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களிடமும் முறையிடப்படவுள்ளது என அவர் சொன்னார். கூடிய விரைவில் நடைபெறவுள்ள அவருடனான மரியாதை நிமித்த சந்திப்பில் இவ்விவகாரத்தை முதன்மையாக அவரின் பார்வைக்கு வைப்பேன் என அவர் சூளுரைத்தார்.

நாம் இந்நாட்டில் பல காலமாக வியாபாரம் செய்து அரசுக்கு வரி காட்டுகிறோம். அனால் எங்கிருந்தோ வரும் அந்நிய நாட்டவர்கள் நம் நாட்டில் உள்ள சில கயவஞ்சவர்களுடன் இணைத்து சுலபமாக பணம் சம்பாதிக்கின்றனர். பல வியாபாரிகளின் வியாபாரங்கள் இதனால் பாதிப்படைகிறது. மைக்கி கண்டிப்பாக அரசுடன் கலந்தாலோசித்து இதற்க்கு ஒரு முற்று புள்ளி வைக்கும் என அவர் குறிப்பிடடார்.